காலஞ்சென்ற ஜெயலலிதாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

  • 5 டிசம்பர் 2016

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு, இந்திய அரசியலில் ஒரு மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது டிவிட்டர் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை NARENDRA MODI

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகத் தெரிவித்த டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று தனது டிவிட்டர் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Arvind Kejriwal
படத்தின் காப்புரிமை MaMTA
படத்தின் காப்புரிமை Office of RG

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். அதே போல் டிவிட்டர் வலைதளத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நாடு இன்று ஒரு மிகப் பெரிய தலைவரை இழந்து விட்டது என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Lalu Prasad Yadav
படத்தின் காப்புரிமை N Chandrababu Naidu

இதே போல் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவும் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு க்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை N Chandrababu Naidu

தொடர்புடைய தலைப்புகள்