எங்கு கொண்டு செல்லப்படுகிறது ஜெயலலிதாவின் உடல்?

தமிழக முதலமைச்சரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் அவருடைய வீடான போயஸ் கார்டனுக்கு எடுத்து செல்லப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

அவரது வீட்டுக்கு செல்லும் வழி முழுவதும் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 5 ஆம் நாள் சென்னை நகரில் மாலை வேளையிலேயே போக்குவரத்துக்கள் குறைந்து விட்டன.

பள்ளிக்கூடங்கள் சற்று நேரத்தோடு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டன.

அரசு மரியாதைக்காக ஜெயலலிதாவின் உடலை எங்கு வைப்பார்கள் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

திரைத் துறையிலிருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய ஜெயலலிதா