ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நாள் தேசிய துக்கம்

தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நாள் தேசிய துக்கம்

இந்நிலையில் கர்நாடகாவில் தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், பீகார் மாநிலத்திலும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழகத்தில் ஒரு வாரம் அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக செவ்வாய் கிழமை (06.12.16) முதல் வியாழக்கிழமை (08.12.16) வரை தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமை பள்ளி கல்வித்துறை செயலாளர் சபிதா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்