குறைந்த வயதிலேயே ஜெயலலிதா மறைந்து விட்டார்: கருணாநிதி இரங்கல்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பல தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை @kalaignar89

"குறைந்த வயதிலேயே மறைந்து விட்டார். எனினும் அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கட்சிகளை பொறுத்து எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் முதலமைச்சர் ஜெயல்லிதா அவரது கட்சியின் நலன்களுக்கு துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர்" என திமுக தலைவர் கருணாநிதி தனது டிவிட்டர் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @mkstalin

"ஜெயலலிதா ஒரு தைரியமான தலைவர் அவரின் இழப்பு ஈடு செய்யமுடியாதது" என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

"ஜெயலலிதாவின் மறைவு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது; அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஒரு துணிச்சல் மிக்க மற்றும் ஒரு மனிதாபிமான தலைவரை மரணம் கொண்டு சென்றிருப்பதை மனம் ஏற்க மறுக்கிறது; அம்மா என்று அழைக்கப்பட்ட அந்த தாய் உள்ளம் இன்று இல்லை என்பதை ஒப்புக் கொள்ள மனம் மறுக்கிறது என பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்து வியக்கத்தக்க வெற்றிகளை குவித்தவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த தமிழக அரசியல் பெண்களால் சாதனைகளை படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்தவர் ஜெயலலிதா என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்புடைய மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள :

ஜெ., உடலுக்கு மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி

முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தடைகளைப் படிக்கல்லாக்கிய அசாதாரணமான வாழ்க்கை - ஜெயலலிதா பற்றி எழுத்தாளர் வாஸந்தி

ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நாள் தேசிய துக்கம்

தலைவர்களுடன் ஜெயலலிதா: அரிய புகைப்படங்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தழுதழுத்த குரலில் பதவியேற்று கொண்ட ஓ.பன்னீர்செல்வம்

'அசாத்திய ஆளுமை, எண்ணற்ற போராட்டங்கள்': ஜெயலலிதா குறித்த நினைவலைகள்

'மக்களால் நான், மக்களுக்காக நான்'

ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நாள் தேசிய துக்கம்

முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு

தொடர்புடைய தலைப்புகள்