ஜெ. உடலுக்கு ரஜினி தன் குடும்பத்தினருடன் சென்று நேரில் அஞ்சலி

  • 6 டிசம்பர் 2016

ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி அரங்கத்திற்கு காலையி்லிருந்து பொது மக்களும், தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தித்திய வண்ணம் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா மற்றும் தனுஷ் ஆகியோருடன் ஜெயலலிதாவின் உடலிற்கு அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக இந்திய நாடு தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.

நேரில் வர இயலாத நடிகர் அஜீத், பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் ஜெயலலிதா என்று தனது இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.

மேலும் இன்று காலையில் நடிகர் விஜய், பிரபு மற்றும் அவரின் குடும்பத்தினர் ஆகியோரும் ஜெயலலிதாவின் பூத உடலுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.

ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டவுள்ளது.

ஜெ., உடலுக்கு மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி

பொது மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் ஜெ., உடல்

முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு

தொடர்புடைய தலைப்புகள்