ஜெவுக்கு மோதி அஞ்சலி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Image caption அஞ்சலி செலுத்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

டிசம்பர் 5-ஆம் தேதியன்று (திங்கள் கிழமை) காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு வந்த பிரதமர் மோதி ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோரிடம் வருத்தம் தெரிவித்து சில வினாடிகள் அவர் பேசியதை தொலைக்காட்சிப் படங்கள் காண்பித்தன .

Image caption பரதிய ஜனதா கட்சி பிரமுகர்களுடன் நரேந்திர மோதி அஞ்சலி

அப்போது சசிகலாவும், பன்னீர் செல்வமும் கண்ணீர் விட்டு அழுததை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ,தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இல.கணேசன் எம்.பி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தில்லி முதல்வர் கெஜ்ரிவாலும், ராஜாஜி அரங்கில் ஜெயல்லிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்போது பேசிய கேஜ்ரிவால், ''ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய நான் கடவுள் பிராத்திக்கிறேன்,' என்றார்.