உடல் நலத்துடன் வீடு திரும்பினார் கருணாநிதி

உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை வீடு திரும்பினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

டிசம்பர் 1ம் தேதி ஊட்டச்சத்து மற்றும் நீர்சத்து உதவிக்காக அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் ஆரோக்கியத்தில் கணிசமான அளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலம் சீரான நிலையை எட்டிவிட்டது என்றும் உயிர்வேதியியல் அளவைகள் வழமைக்கு வந்துவிட்டன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

92 வயதான கருணாநிதி ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், அவர் வீடு திரும்பினாலும் அவரது உடல் நலன் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், தேவையான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.