ஹைதராபாத் கட்டட இடிபாடுகளில் இருந்து 4 வயது சிறுவனும், தாயும் மீட்பு

வியாழக்கிழமை இடிந்த கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து நான்கு வயது சிறுவனும், அவனது தாயும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தென் பகுதி நகரான ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை காப்பாற்றப்பட்ட அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த இடத்தில் இருந்து இறந்த 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் மீட்புதவி பணி இன்னும் தொடர்கிறது.

பல தளங்களைக் கொண்ட அந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகையில், அதன் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அடித்தளத்தில் தங்கியிருந்தனர்.

கட்டுமான விதிகளை மீறியிருப்பதாக குற்றம் சுமத்தப்படும் அந்த கட்டட உரிமையாளருக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்