வேலூரில் சிக்கிய 24 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நோட்டுக்கள்

சென்னையிலும், வேலூரிலும் தொடர்ந்து நடந்துவரும் வருமான வரி சோதனைகளில் மேலும் 24 கோடி ரூபாய் புதிய 2000 நோட்டுகளாக கைப்பற்றப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வேலூரில் மேலும் 24 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நோட்டுக்கள் சிக்கியது

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவர்களுடைய கூட்டாளிகள் ஸ்ரீநிவாச ரெட்டி, பிரேம் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனைகளில் 142 கோடி மதிப்புக்கு ரொக்கம் மற்றும் தங்கமாக கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று இவ்வளவு பெரிய தொகை பிடிபட்டுள்ளது.

வேலூருக்கு அருகில் ஒரு வேனில் இந்தப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமையன்று காலையில் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த ஆரம்பித்ததிலிருந்தே, இந்த வாகனம் வேலூர் நகரில் பணத்துடன் சுற்றிக்கொண்டிருந்ததாகவும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தந்த தகவலின் பேரில் இந்தத் தொகை பிடிபட்டதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வேனை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்