அநாதையான நூற்றுக்கணக்கான நாய்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த மென்பொறியாளர்

ராக்கேஷ் சுக்லா, கைவிடப்பட்ட நாய்களை பராமரிப்பதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துவரும் ஒரு மென்பொறியாளர்.

படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption 45 வயதாகும் ராகேஷ் சுக்லா ஒரு மென்பொறியாளர்

தென் இந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகருக்கு அருகில் உள்ள பண்ணை வீட்டில் புழுதி பறக்க கார் ஒன்று வந்து நின்றது; அதனையடுத்து சுற்றியிருந்த நாய்கள் மகிழ்ச்சியில் குரைக்கவும் குதிக்கவும் தொடங்கின.

சில நொடிகளில் அந்த நாய்கள், காரிலிருந்து இறங்கி வந்த ராகேஷ் சுக்லாவை தடவிக் கொடுத்தது நாவினால் நக்கவும் செய்தன; ராகேஷ் சுக்லாவும் நாய்களை கண்டவுடன் மகிழ்ச்சியடைந்தார்; அவற்றை தடவிக் கொடுத்தும், காதுகளுக்கு பின்னாடியும் அவற்றின் தோள்களிலும் அவற்றிற்கு பிடித்த மாதிரி தடவி கொடுத்தார்.

பின்பு ராகேஷ் சுக்லாவின் மூன்றரை ஏக்கர் பண்ணையை சுற்றிப் பார்த்த பிபிசியின் கீதா பாண்டே, அங்கு 735 நாய்கள் இருந்ததாகக் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption ஷுக்லாவின் பண்ணையில் 735 ஆதரவற்ற நாய்கள் பராமரிக்கப்படுகின்றன

லேப்ரடார், கோல்டன் ரேட்ரீவர், பீகள், ராட்வெய்லர், சயிண்ட் பெர்னாட், பக் உள்ளிட்ட பல உயர் ரக நாய்களை பார்க்க முடிந்தது. கலப்பின நாய்கள் என கூறப்படும் மாங்கரெல் இன நாய்ளும் நூற்றுக்கணக்கில் இருந்தன.

அதில் பெரும்பாலானவை தெரு நாய்கள்; மேலும் பிற, அதன் உரிமையாளர்களால் கைவிடப்பட்டவை. பண்ணையில் சமீபமாக சேர்ந்தவை, 22 பெடிக்ரீ இன நாய்கள், அவற்றின் உரிமையாளரான தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அவை ராக்கேஷ் சுக்லாவிடம் தஞ்சம் அடைந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களுக்கு ஆதரவு அளிக்கிறார் ஷுக்லா

"இந்த நாய்களின் கடைசி புகலிடம் நான் தான். இவைகள் இதற்கு மேலாக தடவிக் கொடுக்கும் நிலையிலும், கொஞ்சுவதற்கான இயல்பிலும் இல்லை. அவைகள் நோய் வாய்ப்பட்டுள்ளன". என்கிறார் 45 வயதாகும் ராகேஷ் சுக்லா.

"நாய்களின் தந்தை" என்று அவர் அன்பாக அழைக்கப்படுகிறார், அவரும் அந்நாய்களை தனது குழந்தைகளாகவும் தான் அவைகளின் தந்தையென்றும் கூறுகிறார்.

பத்து வருடங்களுக்கு முன், தன் மனைவியுடன் சேர்ந்து மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளார் சுக்லா; தனது நாய்களை கவனித்து கொள்ள ஒரு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தனது பண்ணைக்கு வருகிறார்.

படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption கைவிடப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை காணும் போதெல்லாம் தனது வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார் ஷுக்லா

"நான் டெல்லி மற்றும் அமெரிக்காவில் பணி புரிந்துள்ளேன்; பிறகு, பெங்களூருவில் எனது சொந்த நிறுவனத்தை தொடங்கிவிட்டேன். ஆடம்பர கார்கள், விலை உயர்ந்த கடிகாரங்கள், வசதியாக வாழ்வது என்பது மட்டுமே வாழ்க்கையாக இருந்தது; உலகில் பல பகுதிகளையும் சுற்றிப்பார்த்துள்ளேன் இருப்பினும் நான் மகிழ்ச்சியாக இல்லை". என்று கூறுகிறார் சுக்லா.

பிறகு ஒரு நாள் காவ்யா அவரின் வாழ்வில் வந்துள்ளாள். அழகான 45 வயது கோல்டன் ரெட்ரீவர் இன வகை நாய்தான் காவ்யா. அதன் மீது ராகேஷிற்கு அளவு கடந்த பிரியம் ஏற்பட்டது. காவ்யா தன்னிடம் வந்த நாள் ஜூன் 2009 என்று அதை நினைவு கூறுகிறார் சுக்லா.

படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption ராகேஷிடம் வந்த முதல் நாய் காவ்யா

"நாங்கள் அவளை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தவுடன் அவள் ஒரு மூலையில் மறைந்து கொண்டாள்; நான் அவள் அருகில் சென்று அவளை அழைத்தேன். அவள் என்னை பார்த்தாள், அவள் பயமுற்றிருந்தாள், ஆனால் என்னை நம்ப வேண்டும் என்று அவள் விரும்பினாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது" என தெரிவித்தார் சுக்லா.

"அந்த தருணம் தான் என்னுள் ஒரு உணர்வு எழுந்தது; மயிர் கூச்சம் ஏற்பட்டது; ஒரு மிதமான உணர்வு - அதன் பிறகு இங்கு ஏன் வந்தேன் என்ற கேள்வியை நான் கேட்டதே இல்லை" என்றார் சுக்லா.

படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption பண்ணையை நாய்களுக்கு ஏற்றவாறு அமைத்துள்ளார் சுக்லா

காவ்யா வந்த அடுத்த மூன்று மாதங்களில் சுக்லாவின் இரண்டாம் நாய் லக்கியை அவர் தெருவிலிருந்து காப்பாற்றி வீட்டிற்கு கூட்டிவந்தார். "அப்போழுது 12-13 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது லக்கி மிகவும் நனைந்து பாவமாக காணப்பட்டாள். எனவே அவளை நான் இங்கு அழைத்து வந்து விட்டேன்" என்று தெரிவிக்கிறார் சுக்லா.

அடுத்தடுத்து வந்த நாட்களில் தெருநாய்களையோ அல்லது கைவிடப்பட்ட நாய்களை கண்டாலோ அவர் வீட்டிற்கு கூட்டி வந்து விடுவார். முதலில் நாய்களை வீட்டில் வைத்து வளர்த்துள்ளார். பிறகு அவரின் மனைவி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது அலுவலகத்தின் மொட்டை மாடியை நாய்களின் தங்கும் இடமாக மாற்றியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption நோய்வாய்ப்பட்டவுடன் கைவிடப்பட்ட பல நாய்கள் இங்கு உள்ளன

2012 ஆம் ஆண்டு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சுக்லா டாட்பல்லாபூர் நகரில் இடம் வாங்கி நாய்களுக்கான பண்ணையை அமைத்தார். வயதான, நோய்வாய்ப்பட்ட, அல்லது வேண்டாம் என்று கைவிடப்பட்ட நாய்களுக்கு அது புகலிடமாக அமைந்தது.

அந்த பண்ணையில், நாய்கள் ஓடி விளையாடுவதற்கேற்ப திறந்த வெளியும், நாய்கள் நீந்துவதற்கு ஒரு குளமும், நாய்களின் பாதுகாப்பிற்கு இரண்டடுக்கு வேலியும் அமைக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption பல மூன்று கால் நாய்களும் சுக்லாவின் பண்ணையில் காணப்படுகின்றன

அங்கு பயிற்சியளிக்கப்பட்ட கால்நடை பணியாளர்கள் உட்பட, நாய்களை கவனித்து கொள்ளவும், அவற்றிற்கு உணவு சமைக்கவும் அவைகளுக்கு உணவு வழங்கவும் 10 பேர் பணிபுரிகின்றனர்.

அங்குள்ள நாய்களுக்கு தினமும் 200கிலோ கோழிக் கறியும், 200கிலோ அரிசி உணவும் வழங்கப்படுகின்றன. மேலும் நோய்வாய்பட்ட நாய்களுக்கு முறையான மருந்துகளும் கவனிப்பும் தரப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption நாள் ஒன்றிற்கு 45,000 முதல் 50,000ரூபாய் செலவாகிறது
படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption பண்னையில் உள்ள நாய்களுக்கு தினமும் கோழிக் கறி மற்றும் அரிசி உணவு

இந்த பண்ணையை நடத்துவதற்கு நாள் ஒன்றிற்கு 45,000 முதல் 50,000 செலவாகிறது. அதில் 93 சதவீதம் நன்கொடையாக வருகின்றது என சுக்லா தெரிவிக்கிறார்.

கடந்த வருடம் விலங்கியல் ஆர்வலர்கள் சிலர் நாய்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பிரச்சனை எழுப்பியுள்ளனர்.

மேலும் அவர் பல நாய்களை வளர்ப்பது மூலம் பிறருக்கு தொந்தரவு கொடுக்கிறார் என்ற புகார்களும் எழுந்தன.

படத்தின் காப்புரிமை Asif Saud
Image caption சிறுநீரக பாதிப்பிற்குள்ளான நாய் ஒன்றிற்கு தினசரி சிகிச்சை அளிக்கப்படுகிறது

அந்த பண்ணையை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் அவருக்கு வைக்கப்பட்டது.

ஆனால் அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ள மறுக்கும் அவர், "நானும் எனது நாய்களும் இறந்தால் மட்டுமே பிரிவது என்ற ஒப்பந்தம் போட்டுள்ளோம்" என்று தெரிவிக்கிறார்.