ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க விரும்பும் அமீர் கான்

அமீர் கான் நடித்து சொந்தமாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'தங்கல்'. அந்த படத்தின் விளம்பர நிகழ்விற்கு சென்னை வந்த அமீர் கான், ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவியுடன் நடிக்க ஆசை இருப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

Image caption ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் : அமீர்கான் விருப்பம்

அமீர் கான் சொந்தமாக தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் 'தங்கல்' வரும் 23 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அத்திரைப்படத்தின் விளம்பர நிகழ்விற்கு சென்னை வந்திருந்த அமீர் கான் செய்தியாளர்களுடன் உரையாடினார்.

ஆண் - பெண் இருவருமே சமம் என்பது தான் தங்கல் படத்தின் கரு என்றும், விளையாட்டு வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகள் உதயமாக வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படம் விதைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மகளை பற்றி குறிப்பிட்டு பேசிய அமீர் கான், என்னுடைய மகள் 'அய்ரா'  ஒரு கால்பந்து வீராங்கனை என்பதை தற்போது  நினைக்கும்  போது பெருமையாக இருப்பதாகவும், தன்னுடைய மகள் தன்னைப்போல நடிப்பில் ஆர்வம் கொண்டு, திரையுலகில் கால் பதித்தால், தான் மேலும் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, தமிழில் ரஜினிகாந்துடனும், தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் இணைந்து நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக அமீர் கான் குறிப்பிட்டார்.