சிகிச்சை பெறும் கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு

  • 21 டிசம்பர் 2016

சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை அம்மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்துடன், மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவருக்குத் தரப்பட வேண்டிய 'ஆண்டிபயோடிக்' மருந்துகள் தரப்பட்டு முடிந்தவுடன் அவர் வீடு திரும்புவார் என்றும், அவர் சிறப்பாக குணமடைந்து வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வரும் வெள்ளிக்கிழமையன்று, அதாவது டிசம்பர் 23-ஆம் தேதியன்று வீடு திரும்புவார் என மு.க. ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

தொடர்புடைய தலைப்புகள்