தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் நீக்கப்பட்டு, கூடுதல் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Girija Vaidyanathan FACEBOOK
Image caption தமிழகத்தின் தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

தலைமைச் செயலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து படிக்க:தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனை

தமிழக தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவின் வீட்டில், நேற்று (புதன்கிழமை) வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவரது மகன் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் 30 லட்ச ரூபாய் பணமும் ஐந்து கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

இந்த நிலையில், ராம மோகன ராவை தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, புதிய தலைமைச் செயலாளரை தமிழக அரசு நியமித்துள்ளது.

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், நில நிர்வாக ஆணையராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ராம மோகன ராவ் கவனித்து வந்த கண்காணிப்பு ஆணையர், நிர்வாக சீர்திருத்த ஆணையர் ஆகிய பணிகளையும் கிரிஜா வைத்தியநாதனே கவனிப்பார் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்