ஜனவரி 4-ஆம் தேதி கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்

  • 26 டிசம்பர் 2016

ஜனவரி 4-ஆம் தேதியன்று, திமுக தலைவர் மு. கருணாநிதி தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

Image caption முக்கிய முடிவுகளை அறிவிப்பாரா?

இது தொடர்பாக க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற ஜனவரி 4-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பர் 20-ந் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஜனவரி 4-ஆம் தேதியன்று கூடவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியில் நிர்வாக ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்