இந்தியாவின் அக்னி 5 ஏவுகணையின் நான்காவது சோதனை வெற்றிகரமாக நடந்தேறியது

  • 26 டிசம்பர் 2016

இந்தியா தனது அணுசக்தி ஆயுதங்களை சுமந்துச் செல்லக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் நான்காவது சோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP

திங்களன்று, அக்னி - 5 ஏவுகணை இந்திய கிழக்கு கடற்கரையிலிருந்து செலுத்தப்பட்டது.

5,000 கிமீ தொலைவிற்கும் அதிகமாக சென்று தாக்கும் வல்லமை கொண்டது அதன் தாக்குதல் தொலைவில் சீனாவும் அடங்கும்.

அந்த முயற்சி "கேந்திரிய மற்றும் எதிரிகளை ஒடுக்கும் திறனை அதிகரிக்கும்" என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியா அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையை 2012 ஆம் ஆண்டும், இரண்டாம் சோதனையை 2013 ஆம் ஆண்டும், மூன்றாம் சோதனையை 2015 ஆம் ஆண்டும் நடத்தியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அக்னி - 5, 17.5 மீ நீளமும் மேலும் திட எரிப்பொருளால் இயங்கக் கூடியது. அதில் மூன்று பகுதிகள் உள்ளன. மேலும் 50 டன் எடையை சுமந்துச் செல்லும் வல்லமை கொண்டது.

இந்த ஏவுகணைகள் இந்தியாவின் மிகவும் அதிநவீன ஆயுதங்களில் ஒன்று. மேலும் அக்னி என்றால் இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் "நெருப்பு" என்று பொருள்.

தொடர்புடைய தலைப்புகள்