டெல்லி எய்ம்ஸ் மருத்துமனை தமிழ் மாணவர் சரவணனின் மரணம் கொலை வழக்காக மாற்றம்

கடந்த ஜூலை மாதம் உயிரிழந்த, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயின்று வந்த தமிழ் மாணவர் சரவணனின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை FACEBOOK

சரவணன்(26) மரணத்தில் சந்தேகம் உள்ளதாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் இதை விசாரிக்க தனிப் படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கெளதம் நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் தனது அறையில் சரவணன் இறந்து கிடந்தார் என்றும் அவரது அறையில் இருந்து ஊசி போடுவதற்கான குழாயை கைப்பற்றியதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

பட்டமேற்படிப்பு பயில டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் அவர் இறந்தது அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சரவணனின் மரணம் தொடர்பான வழக்கை நடத்திவரும் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், ''சரவணனின் மரணம் தற்கொலை என டெல்லி போலீசார் பதிவு செய்திருந்தனர். தற்போது ஐந்து மாதம் கழித்து இது தற்கொலை அல்ல, கொலை என முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் தனக்குத் தானே ஊசி போட்டு இறந்துபோனதற்கான வாய்ப்பு இல்லை என்பது அவரது பிரதே பரிசோதனை அறிக்கையில் தெளிவாகியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி இந்த வழக்கின் விசாரணைக்காக தனிக் குழு ஒன்றும் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.

தொடர்புடைய தலைப்புகள்