70-க்கும் மேற்பட்ட கொடிய பாம்புகளுடன் விஷத்தை விற்று லாபம் சம்பாதித்தவர்கள் கைது

இந்தியாவின் மேற்கு பகுதி நகரான புனேயில் அடுக்குமாடி குடியிருப்பில் 70க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

மரப்பெட்டிகள் மற்றும் சாக்கு மூட்டைகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட கண்ணாடி விரியன் மற்றும் 30 நாக பாம்புகளை அந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மீட்டுள்ளனர்.

மேலும் அந்த பாம்புகள் வைக்கப்பட்டிருந்த வீட்டில், கைது செய்யப்பட்ட நபருடன், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடம் இருந்தனர்.

பாம்புகளின் விஷத்தை எடுப்பதற்காக, கைது செய்யப்பட்டவர்கள் பாம்பாட்டிகளிடமிருந்து அல்லது காடுகளிலிருந்து பாம்புகளை பிடித்து வந்துள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சில பகுதிகளில் பாம்புகளின் விஷம் லாபத்திற்காக விற்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களைப் பிடித்து வைத்திருப்பது சட்டவிரோத செயலாகும்.