காஷ்மீர் ரீடர் பத்திரிகை மீதான தடை விலகியது

  • 28 டிசம்பர் 2016

இந்திய அரசால் விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டு நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டதால், இந்திய நிர்வாகத்திற்கு உட்பட் காஷ்மீரில் ஒரு பிரபல தினசரி பத்திரிகையான காஷ்மீர் ரீடர்மீண்டும் வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட காஷ்மீரில்,அக்டோபர் மாதம் தீவிர கிளர்ச்சி வெடித்த சமயத்தில், "பொது அமைதியை" குலைப்பதாக குற்றம் சாட்டப்பட்டு ஆங்கில மொழியில் வெளியாகும் காஷ்மீர் ரீடர் பத்திரிகை மீது தடை விதிக்கப்பட்டது.

உண்மையான செய்திகளை அரசு முடக்க முயற்சிப்பதாக மனித உரிமை அமைப்புகள் கருத்து தெரிவித்தன.

காஷ்மீர் ரீடர் பத்திரிகையின் ஆசிரியர் ஹிலால் மீர் பிபிசியிடம், ஒரு தவறு தற்போது திருத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.