சொந்த மகனை கட்சியிலிருந்து நீக்கினார் முலாயம் சிங் யாதவ்

உ.பி மாநில முதல்வரும், தன்னுடைய மகனுமான அகிலேஷ் யாதவை சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், அவருடைய தந்தையுமான முலாயம் சிங் யாதவ் நீக்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சொந்த மகனை கட்சியிலிருந்து நீக்கினார் முலாயம் சிங் யாதவ்

இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவையும், ராம்கோபால் யாதவையும் கட்சியிலிருந்து 6 வருடங்களுக்கு நீக்குவதாக தெரிவித்தார்.

தனக்கு கட்சித்தான் முக்கியம் என்றும், கட்சியை காப்பாற்றுவதே தன்னுடைய முதன்மை பணி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அகிலேஷ் தன்னிடம் எதையும் கலந்தோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக முலாயம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் உ.பியில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்