உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல்; 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றவுள்ள சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதிபுதன்கிழமை டெல்லியில் அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை ELECTION COMMISSION OF INDIA
Image caption இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி
  • 40 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட கோவா மற்றும் 117 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
  • 60 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் முதல் கட்டமாக மார்ச் 4-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக மார்ச் 8 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும்.
  • 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட உத்தராகண்ட், மாநிலத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
  • 403 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது.
  • பிப்ரவரி 11, 15, 19, 23, 27 மார்ச் 4 மற்றும் மார்ச் 8 ஆகிய ஏழு நாட்களில் உத்தப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்.
  • மார்ச் 11- ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
  • இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்