இந்தியாவின் மூத்த நடிகர் ஓம் புரி மரணம்

இந்தியாவின் மூத்த நடிகரான ஓம் புரி தன்னுடைய 66 வது வயதில் காலமாகியுள்ளாதாக அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Google

வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் மும்பை நகரிலுள்ள அவருடைய இல்லத்தில் அவர் இறந்ததாக குடும்ப உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய "ஈஸ்ட் இஸ் ஈஸ்ட்" திரைப்படத்தின் நட்சத்திர நடிகர் இவராவார்.

அவர் மாரடைப்பால் இறந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓம் புரி பாலியுட்டின் முக்கிய திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

"ஜூவல் இன் த கிரவுன்" மற்றும் "சிட்டி ஆப் ஜாய்" ஆகிய பிரிட்டிஷ் திரைப்படங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.

பிரிட்டிஷ் திரைப்பட துறைக்கு ஓம் புரி வழங்கிய பங்கை பாராட்டி அவருக்கு பிரிட்டன் அரசி வழங்குகின்ற மரியாதைக்குரிய ஒபிஇ (OBE - பிரிட்டிஸ் பேரரசில் சிறந்த அலுவலர்) விருது 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

திரைப்பட தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகளையும் ஓம் புரி பெற்றுள்ளார்.

இந்தியில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், பஞ்சாபி, தமிழ் என பல்வேறு மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

இவருடைய மரணத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்