முதல்முறையாக இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் போர்ச்சுக்கல் பிரதமர்

போர்ச்சுக்கல் பிரதமர் அன்டோன்யோ கோஷ்டா இன்று முதல் இந்தியாவில் 6 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் போர்ச்சுக்கல் அரசின் முதல் தலைவரும், ஐரோப்பிய நாடு ஒன்றின் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பிரதமருமான அன்டோன்யோ கோஷ்டா

இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் போர்ச்சுக்கல் அரசின் முதல் தலைவர் இவராவார்.

ஐரோப்பிய நாடு ஒன்றின் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பிரதமர் கோஷ்டா என்பது குறிப்பிடத்தக்கது.

காலனியாதிக்க பிரச்சனைகள், 1961 ஆம் ஆண்டு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு, 450 ஆண்டுகளாக போர்ச்சுகீசிய காலனிப் பகுதியாக இருந்த கோவா இந்தியாவோடு இனைக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றால் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவு பதட்டமானதாகவே இருந்து வந்துள்ளதாக லிஸ்பனில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இந்த இந்திய பயணத்தின்போது, தன்னுடைய முன்னோரின் தாயகமான கோவாவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்தும் கோஷ்டா, இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார்.