பெட்ரோல் பங்குகளில் வங்கி அட்டைகள் ஏற்கப்படும் காலம் 13-ஆம் தேதி வரை நீடிப்பு

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சில வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் பெட்ரோல் பங்குகளில் பணப் பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தி்ருந்த நிலையில் அது ஜனவரி 13 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Thinkstock

சில வங்கிகள் தங்களின் பண மற்றும் கடன் (டெபிட் மற்றும் கிரெடிட்) அட்டைகளின் பணப்பரிமாற்றத்துக்கு 1% வரி விதிக்கப்போவதாக அறிவித்ததையடுத்து, டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் பெட்ரோல் பங்குகளில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து அரசாங்கத்தின் தலையீட்டால் அந்த முடிவு ஜனவரி 13 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளும், எண்ணெய் நிறுவனங்களும் தங்களுக்குள் பேசி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 8-ஆம் தேதி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பிறகு, பெட்ரோல் பங்குகளில் பணமில்லாத பரிவர்த்தனை அதிகரித்தது. ஆனால் வங்கிகளின் அந்த திடீர் முடிவால் தங்களது வருவாய் பெரிதும் பாதிக்கப்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கததினரால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்