பாட்னா படகு விபத்தில் 23 பேர் பலி

  • 15 ஜனவரி 2017

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது23 பேர் உயிரிழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை PTI

பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் 40 பேர் பயணித்துள்ளனர்.

இதுவரை சுமார் 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் விழுந்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption மீட்புப் பணிகள் தீவிரம்

இந்நிலையில், பீகார் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும் அவர்களைப் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிக் கொள்வதாகவும் பிரதமர் மோதி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க: பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்