அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  • 16 ஜனவரி 2017
படத்தின் காப்புரிமை STRDEL/AFP/Getty Images

ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்ற தடை இருக்கும் நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று போராட்டம் இன்று (திங்கள்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சில காளை மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டதால், அங்கு பரப்பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை STRDEL/AFP/Getty Images

விதிக்கப்பட்டுள்ள தடையை மீறியும் ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்ற தகவல் ஏற்கெனவே பரவியதால் நேற்று முதல் அங்கு பலத்த போலிஸ் காவல் இடப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு - பண்பாட்டுக் கொண்டாட்டமும், நவீன புரிதலும்

விலங்கு வதைக்கு எதிராக போராடி வருகின்ற பீட்டா அமைப்புக்கு எதிராகவும் இளைஞர்கள் முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள்.

படத்தின் காப்புரிமை SANKAR/AFP/Getty Images

உலக பிரபலம் அடைந்திருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போய்விடுமோ என்று பலரும் கவலை அடைந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு தடை: சட்டத்துக்காக மக்களா, மக்களுக்காக சட்டமா? சீமான் கேள்வி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜல்லிக்கட்டு தடை: சட்டத்துக்காக மக்களா, மக்களுக்காக சட்டமா? சீமான்

'ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்': இளைஞர்கள் கூட்டத்தால் அதிர்ந்த சென்னை

இன்றைய காணும் பொங்கலை கறுப்பு தினமாக இங்குள்ள மக்கள் அனுசரித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை SANKAR/AFP/Getty Images

நேற்று தமிழகத்தின் பல இடங்களில் தடை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் வந்த நிலையில், இன்றும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடப்பதாக தகவல்கள் வருகின்றன.

காணொளி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவனியாபுரத்தில் தடையை மீறி பேரணி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அவனியாபுரத்தில் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்ட பேரணி (காணொளி)

ஜல்லிக்கட்டு விவகாரம்: இளைஞர்களை பா ஜ க ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜல்லிக்கட்டு விவகாரம்: பா ஜ க இளைஞர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்