தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடரும் போராட்டங்கள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் கைதுசெய்யப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.

Image caption அலங்காநல்லூரில் பொதுமக்கள் சாலை மறியல்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் போராடிவந்தவர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் காவல்துறை கைதுசெய்து, தடுப்புக் காவலில் வைத்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது

இதையடுத்து, அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூரைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருந்த போதும், அவர்கள் கலைந்துசெல்லவில்லை.

காணொளி: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடரும் போராட்டங்கள்

இதற்கிடையில், கைதுசெய்யப்பட்டு வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் கைதுசெய்யப்பட்டவர்களில் 32 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் எப்போதுவேண்டுமெனாலும் செல்லலாம் மாவட்ட எஸ்பி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும் அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் - வெளியிலிருந்து திரண்ட ஆதரவும், உள்ளூர் மனநிலையும்

கைதுசெய்யப்பட்டவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இதற்கிடையில், சென்னை மெரினா கடற்கரையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த முயன்றவர்களை காவல்துறை தடியடி நடத்தி கலைத்தது.

காணொளி: அலங்காநல்லூர் நோக்கி விரையும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அலங்காநல்லூர் நோக்கி விரையும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மதுரையில் நேற்று போராட்டம் தொடங்கியது.

அந்த போராடத்தின் தொடர்ச்சியாக சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இரவு நேரத்தில் போராட்டக்கார்கள் தங்களது செல்போன்களில் உள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்