ஆந்திராவில் ரயில் தடம்புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 36-ஆக அதிகரிப்பு

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், குறைந்தது 36 பேர் பலியாகியுள்ளனர்,60-க்கு மேலானோர் காயம் அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Subrat Kumar Pati

விஜயநகரில் குனெரு ரயில் நிலையத்திற்கு அருகில் 7 ரயில் பெட்டிகளும், ரயில் எஞ்சினும் தடம்புரண்டன என்று கிழக்கு கடற்கரை ரயில்வே துறையின் தலைவர் ஜே.பி மிஷ்ரா தெரிவித்திருக்கிறார்.

சிதைந்த ரயில் பெட்டிகளுக்கு இடையில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால், உயிழந்தோரின் எண்ணிக்கை உயரலாம் என்று மீட்புதவிப் பணியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

இந்த ரயில் தடம்புரள்வதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

கான்பூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்து: இருவர் பலி

காயமடைந்தோர் அருகிலுள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு எடுத்துசெல்லப்பட்டிருப்பதாக மிஷ்ரா தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Subrat Kumar Pati

இந்த ரயில் ஜாக்டால்பூரில் இருந்து ஒடிஸாவின் தலைநகர் புவனேஸ்வருக்கு சென்று கொண்டிருந்தபோது, சனிக்கிழமை மாலை இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

பெரும்பாலான ரயில் உபகரணங்கள் பழையவையாக இருப்பதால், இந்தியாவில் ரயில் விபத்துக்கள் அசாதாரணமானவை அல்ல.

படத்தின் காப்புரிமை Subrat Kumar Pati

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் வட பகுதியிலுள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் தடம்புரண்டதில் 140 பேருக்கு அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்