''போலீஸ்தான் தீ வைத்தது'' : நடுக்குப்பம் மக்கள் கருத்து (காணொளி)

''போலீஸ்தான் தீ வைத்தது'' : நடுக்குப்பம் மக்கள் கருத்து (காணொளி)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் கடந்த 23 ஆம் தேதி காலை சில வன்செயல்கள் நடைபெற்றன.

அப்போது, மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பத்தில் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

தற்போது, இந்த விவகாரத்தில் போலீஸ் அத்துமீறி செயல்பட்டிருப்பதாக நடுக்குப்பம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தங்கள் பகுதியிலிருந்த கடைகள் மட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தது போலீஸார்தான் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்