'செல்லா நோட்டு பிரச்னையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் அடுத்த ஆண்டில் தொடராது'

2017-18 நிதி ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜேட்லி, ''செல்லா நோட்டு பிரச்னையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் அடுத்த ஆண்டில் தொடராது'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“செல்லாநோட்டு அறிவிப்பு வளர்ச்சியை மந்தப்படுத்திவிட்டது”- அரசு அறிக்கை

படத்தின் காப்புரிமை इमेज कॉपीरइटLSTV
Image caption 'செல்லா நோட்டு பிரச்னையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் அடுத்த ஆண்டில் தொடராது'

பல்வேறு புதிய திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளை அறிவித்த அருண் ஜேட்லியின் உரையில் இருந்து சில முக்கிய துளிகள்:-

இந்திய பட்ஜெட் உரையை தொடங்கினார் அருண் ஜேட்லி

கல்வி

 • திறன் மேம்பாட்டு திட்டத்துக்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது ; 100 திறன்மேம்பாட்டு மையங்கள் புதிதாக தொடங்கப்படும்.
 • திறன்மேம்பாட்டு மையங்கள் மூலம் அறிவியல் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 • திறன்மேம்பாட்டு மையங்கள் மூலம் அந்நிய மொழிகள் கற்றுத் தரப்படும்.
 • புதிய கண்டுபிடிப்புகளுக்காக மாணவர்களை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
 • கிராமப்புற மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி அளிக்க புதிய தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும்.

மருத்துவம்

 • குஜராத் மற்றும் ஜார்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
 • மருத்துவ கல்வியில் மேல் கல்வி மற்றும் முதுநிலை பட்டங்களுக்கு 5000 இடங்கள் அதிகரிக்கப்படும்.
 • 2025-ஆம் ஆண்டுகள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.

ரயில்வேதுறை

 • வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் ஆளில்லாத ரயில்வே கிராஸிங் (கேட்டுகள்) நாட்டில் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
 • ஐ.ஆர்.சி.டி சி மூலம் பதிவு செய்யப்படும் இ -டிக்கட்களுக்கு சேவை கட்டணம் ரத்து செய்யப்படும்.
 • புதிய மெட்ரோ ரயில் சட்டம் ஒன்று உருவாக்கப்படும்.
 • பயணிகளுக்கு உதவ ரயில் பெட்டிகளில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்
 • தேசிய நெடுஞ்சாலைகளுக்காக 64,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பாஸ்போர்ட்

 • தலைமை தபால் நிலையங்கள் பாஸ்போர்ட் அலுவலகங்களாக பயன்படுத்தப்படும்.
 • தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை வழங்கப்படும்.

முக்கிய அறிவிப்புகள், நிதி, ஒதுக்கீடுகள்

 • பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு சென்றாலும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் கொண்டு வரப்படும்.
 • கரும்பு நிலுவைத் தொகை வழங்குவதற்கு 9000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 • தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு செய்யப்படுகிறது.
 • பால் பதப்படுத்தும் கட்டமைப்பிற்காக நபார்டு வங்கியின் கீழ் 8000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 48,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • 2018-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதியில் இந்தியாவில் உள்ள 100 சதவீத கிராமப்புறங்கள் மின்சார வசதியை பெற்றுவிடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்