சென்னை கடற்பரப்பை மாசுபடுத்திய எண்ணெய்க் கசிவு (புகைப்படத் தொகுப்பு)

எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த சனிக்கிழமையன்று இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதை அடுத்து, சென்னை கடற்பரப்பில் எண்ணெய் படலங்கள் பரவின. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்த சனிக்கிழமை அதிகாலையில், எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த விபத்து மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்கவில்லை என்றும், 200 லிட்டர் அளவிலான எண்ணெய் கசிவு மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், எண்ணூர் காமராஜர் துறைமுக அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அப்பகுதியில் கடல் மாசு ஏற்படாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், செவ்வாய்கிழமைக்குள் நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அந்த அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆனால் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் எண்ணெய் திட்டுக்கள், சென்னை மெரினா கடற்கரை பகுதியை தாண்டியும் பரவ தொடங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், குற்றஞ்சாட்டுகின்றனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சென்னை பகுதியை சேர்ந்த மீனவர்களும் எண்ணெய் கசிவு குறித்து கவலை தெரிவித்தனர். படத்தில் எண்ணெய் மாசால் பாதிக்கப்பட்ட ஒரு கடல் ஆமை
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அரசு தங்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்த சனிக்கிழமை அதிகாலையில், எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்