என்னை ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தினர்: பன்னீர்செல்வம் புகார்

முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தித்தான் ராஜிநாமா செய்ய வைத்தார்கள் என்று பரபரப்பாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நேற்றுவரை சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தது ஏன் என்றும்? உண்மையாக நடந்தவை என்ன என்றும் விளக்குகிறார், இது வரை மெளனம் காத்து வந்த ஓ.பன்னீர் செல்வம். சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 40 நிமிடநேரம் தியானம் செய்த பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் அங்கிருந்தபடியே பேசினார். அதன் ஒலிவடிவம்.