`பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைக்கு திமுகவே காரணம் - நாஞ்சில் சம்பத்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் பன்னீர்செல்வத்தின் அதிரடி செய்தியாளர் கூட்டத்திற்கும், அறிவிப்புக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் பின்னணி இருப்பதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளுக்கு திமுக ஆதரவாக இருக்கும் என்று எதிர்கட்சியின் துணை தலைவர் துரைமுருகன் கூறியிருக்கிறார் என்பதை அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முதல்வர் பன்னீர்செல்வம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று திமுகவின் செயல்தலைவர் கூறியதையும் அவர் குறிப்பிட தவறவில்லை.

தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிற ஒ. பன்னீர் செல்வம், தன்னை கட்டாயப்படுத்தித்தான் ராஜினாமா செய்ய வைத்ததாக ஜெயலலிதாவின் சமாதிக்கு அருகில் வைத்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததை அடுத்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்