அமைதி காக்க பன்னீர்செல்வம் வேண்டுகோள்

  • 14 பிப்ரவரி 2017

அதிமுகவின் பொது செயலாளர் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, கட்சி தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஓ பன்னீர்செல்வம்அதிமுக ஆட்சி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

அவர், மாற்று கட்சி, எதிர்க்கட்சி யாருடைய உதவியும் இல்லாமல் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார்.

சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை

அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

''தற்போதும் அதிமுக தலைவர் அம்மாவின் ஆட்சிதான் நடந்து வருகிறது. அவரது நல்லாட்சி தொடரும்,'' என்றார்.

''நமது நோக்கம் அமைதியை நிலை நாட்டவேண்டும். நமது தலைமையில் ஆட்சி தொடரும். சற்று நேரத்திற்கு வந்த தீர்ப்பு அம்மாவின் ஆன்மா நம்முடன் தான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது ,'' என்றார்.

அதிமுகவினர் மற்றும் பொது மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, முதலவர் பன்னீர்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா அணியினரால் நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

இதுவரை மொத்தம், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணியில் உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்