எடப்பாடி அணி மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு

  • 15 பிப்ரவரி 2017

தமிழக சட்டப்பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தங்களுடன் இருப்பதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனக் கோரி சசிகலா ஆதரவு அணியினர் மீண்டும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை DIPR

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றமும் நேற்று உறுதி செய்ததால், அந்த அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக நேற்று தேர்வுசெய்யப்பட்டார்.

இதற்கான கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் நேற்று ஆளுநரைச் சந்தித்து அளித்தனர். தங்களை ஆட்சியமைக்க அழைக்கும்படியும் கோரினார்.

ஆனால் ஆளுநரிடமிருந்து எந்த அழைப்பும் வராத நிலையில், இன்று மாலை 7.30 மணியளவில் மீண்டும் ஆளுநரைச் சந்தித்த சசிகலா அணியைச் சேர்ந்தவர்கள், இதே கோரிக்கையை விடுத்தனர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், தங்களிடம் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான எம்எல்ஏக்கள் இருப்பதாகவும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜனநாயகத்தைக் காப்பார் என்று நம்புவதாகவும் கூறினார்.

ஓ. பன்னீர்செல்வமும் தனக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறுவது குறித்துக் கேட்டபோது, "126 எம்எல்ஏக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. 126 பெரிதா, 8 பெரிதா?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.

கடந்த ஐந்தாம் தேதியன்று தனது முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு தற்போதுவரை அவர் காபந்து முதலமைச்சராக நீடித்துவருகிறார்.

பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார் சசிகலா

சசிகலாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும்: வாட்சப் கேலிகளும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்