பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா சரண்
பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா சரண்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்
பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அஷ்வத் நாராயணா முன்னிலையில் மாலை 5.30 மணியளவில் சரணடைந்தார்.
சென்னையிலிருந்து சாலை மூலம் பயணித்த அவர், ஜெயலலிதா நினைவிடத்திலும், எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திலும் அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டார்.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற இன்னொரு நபரான சசிகலாவின் உறவினர் இளவரசியும் உடன் வந்தடைந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்