புதிய மசோதா ஏற்கப்பட்டால், இந்தியாவில் ஆடம்பரத் திருமணங்களுக்கு தடை

  • 16 பிப்ரவரி 2017

இந்திய நாடாளுமன்றத்தில், தனி நபர் மசோதா ஏற்கப்பட்டால், ஆடம்பரத் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நிலை ஏற்படும்.

படத்தின் காப்புரிமை JANARTHAN REDDY
Image caption 5 பில்லியன் ரூபாய் செலவில் நடந்ததாக கூறப்படும் கர்நாடக மாநில தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி (இடது) மகள் திருமணம்

இந்த மசோதாவின்படி, திருமணத்துக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை, பரிமாறப்படும் விருந்து ஆகியவற்றுக்கும் கட்டுப்பாடு விதிப்பதுடன், ஆடம்பர செலவுகளின் மீது தனி வரி விதிப்பும் இருக்கும்.

ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல்($7500, £6000) திருமண செலவு செய்வோர், மொத்த செலவில் 10 சதவீதத்தை ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக வழங்க வேண்டும்.

ஆடம்பரங்களில், எல்சிடி திரையுடன் கூடிய தங்கமுலாம் பூசப்பட்ட திருமண அழைப்பிதழ்களும் அடங்கும்.

கட்டாயப்பதிவு மற்றும் வீண் செலவுகளைத் தடுத்தல் மசோதா 2016-ஐ ரஞ்சீத் ரஞ்சன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரைத்துள்ளார். இந்தியத்திருமணங்கள் தனி நபர்கள் தங்களது பண பலத்தை வெளிக்காட்டும் வகையிலேயே இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

"இதன் காரணமாக, ஏழைக் குடும்பங்கள் தங்கள் குடும்பத் திருமணத்துக்கும் அதிகம் செலவிட வேண்டும் என்ற மிகக்கடுமையான சமூக நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இவரது பரிந்துரை, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில், மக்களவையில் தனிநபர் மசோதாவாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்.