பழனிச்சாமி அரசு பலத்தை நிரூபிக்க நாளை பேரவைக் கூட்டம்

  • 16 பிப்ரவரி 2017

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி கே. ழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

படத்தின் காப்புரிமை L.vivian.richard

சட்டமன்றச் செயலர் ஜமாலூதீன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணியளவில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அவர் உள்பட 31 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.

முன்னர், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எடப்பாடி கே.பழனிச்சாமியை சட்டமன்றத் குழுத் தலைவராக தேர்ந்தெடுத்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவை இருமுறை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.

அதனைத்தொடர்ந்து, சட்டமன்றத்தில் 15 நாட்களுக்குள் எடப்பாடி கே.பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், பிப்ரவரி 18 ஆம் தேதி சட்டப்பேரவையை விதி எண் 26 (1) -ன் கீழ், பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். அதில், புதிய அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்