சட்டசபையில் அமளி --திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவு

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நேரத்தில், கடும் அமளி ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சபை தொடங்கியவுடன், திமுக மற்றும் அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் அணியினர் கோரிய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.

திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர் என்றும் அவரது மைக் உடைத்து வீசப்பட்டது என்றும் தொலைக்காட்சி பதிவுகள் காட்டுகின்றன.

சபாநாயகர் தனபால் சிறிது நேரம் அவையை ஒத்திவைத்தார்.

அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

பின்னர் அவை கூடியதும், திமுக உறுப்பினர்களை வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார் என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

ஆனால் தொடர்ந்து அவையில் குழப்பம் நிலவியதால், அவையை பிற்பகல் மூன்று மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார் என்று நமது செய்தியாளர் கூறுகிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பும், கட்சி தாவல் தடை சட்டமும் ; 10 முக்கியத் தகவல்கள்

வாக்கெடுப்பை புறக்கணிக்கிறார் கோவை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்