சட்டசபை மோதல் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சட்டசபையில் நடந்த மோதல், கடந்த 30 வருடங்களில் நடைபெறாத வகையில், தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Facebook/G.Ramakrishnan

இது பற்றி அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தமிழகத்தில் தாதுமணல் கடத்தல், ஆற்று மணல் கொள்ளை உள்ளிட்ட இயற்கை வள கொள்ளை மற்றும் லஞ்சப் பெருக்கெடுப்பு ஆகியவற்றை வளர்த்தது அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் தான் என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அதிமுகவின் அதிகாரப்போட்டி, திமுகவின் அதிகார வேட்டை, அதிகாரத்தை பிடிப்பதற்கான பாஜகவின் புழக்கடை முயற்சிகளால் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளான விவசாயிகள் தற்கொலை, வறட்சி, குடிநீர் பஞ்சம், உட்பட எந்த வித பிரச்சனைகளும் கண்டுகொள்ளப்படவில்லை; எனவே அதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்தவுள்ளது என்று கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்