தமிழக அரசு ஊழியர் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு அமைப்பு

தமிழக அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க ஐந்து பேர் கொண்ட அலுவலர் குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம், TWITTER

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த குழுவில், நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர், உள்துறையின் முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறையின் செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலர் உமாநாத் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு தனது பரிந்துரைகளை நான்கு மாத காலத்திற்குள் தமிழக அரசுக்கு சமர்பிக்க உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்