தில்லியில் வாடிக்கையாளருக்கு கள்ள 2,000 ரூபாய் நோட்டுக்களை வழங்கிய ஏ.டி.எம்

தென்கிழக்கு தில்லியில் ஏ.டி.எம் இயந்திரம் ஒன்றில் இருந்து கள்ள நோட்டு பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக, தில்லி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

சில்ட்ரன் பேங்க் ஆஃப் இண்டியா என்ற பெயரில் அச்சிடப்பட்டுள்ள இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டில், ச்சூரன் லேபிள் (CHURAN LABLE) என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் சங்கம் விஹார் பகுதியில், ரோஹித் என்ற இளைஞர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும்போது, இந்த கள்ள நோட்டு வந்ததாக புகார் அளித்ததை அடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்த இந்திய அரசு, 2,000 மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்