கார்பெட் பூங்காவில் புலிகளை வேட்டையாடுபவர்களைக் கண்ட இடத்திலேயே சுட உத்தரவு

புலிகள் மற்றும் சிறுத்தைகளை வேட்டையாடுபவர்களை கண்ட இடத்திலேயே சுடலாம் என, இந்தியாவில் பிரசித்தி பெற்ற கார்பெட் வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

இந்திய வங்காள புலி

பட மூலாதாரம், Getty Images

இந்த சரணாலயத்தில், முக்கியமாக புலிகள் வாழும் இடங்களில் ஆயுதமேந்திய வேட்டைக்காரர்களை கண்ட உடனே சுடலாம் என்று வன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாக கார்பெட் வனவிலங்கு சரணாலயத்தின் இயக்குனர் கூறியதாக ஹிந்து நாளிதழ் தெரிவிக்கிறது.

அங்கு சுற்றுலாப் பயணிகளையும் சோதனை செய்வது தொடங்கப்படவுள்ளது. காஜிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில், வேட்டைக்காரர்களை கண்டதும் சுடும் கொள்கைகள் இப்பகுதியில் அதிக அளவு மனித உயிர்களை பலிகொள்வதாக கூறும் ஒரு பி.பி.சி ஆவணப்படம் வெளியான சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.