பிபிசியின் தமிழ் பிரிவில் இணைந்து பணியாற்ற ஆர்வமா ?

பிபிசி நிறுவனத்தின் தமிழ் பிரிவில் பணிபுரிவதற்கான ஒன்பது புதிய பணியிட வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிபிசி தமிழ்

பிபிசி தமிழ்

பிபிசி உலக சேவையின் தமிழ் சேவையான தமிழோசை 75 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

வாரம் ஒரு முறை எனத் தொடங்கி, வானொலி மூலம் இப்போது தினசரி நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா என கடல் கடந்து வாழும் தமிழர்கள் எமது நிகழ்ச்சியை இந்த இணையதளம் மற்றும் பல்வேறு மறுஒலிபரப்புகள் மூலமாக கேட்டுவருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பிபிசி தமிழ்.காம் என்ற இணைய தளம் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும், பிபிசி தமிழ் பிரிவு செய்திகளை வழங்கிவருகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பிபிசி தமிழின் வானொலி மற்றும் இணைய சேவைகள் இந்தியாவின் தலைநகர் புதுதில்லியிலிருந்து இயங்கி வருகின்றன.

புதிய பணியிட வாய்ப்புகள் :

தற்போது, 9 புதிய பணியிட வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. காணொளி செய்தியாளர்கள் ( இரண்டு பதவிகள் )

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பணிபுரிவதற்கு வீடியோ ஜர்னலிஸ்ட் எனப்படும் காணொளி செய்தியாளர்கள் தேவைப்படுகின்றனர். பணி குறித்த அறிமுகம், பொறுப்பு மற்றும் இதர விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

2. பல்லூடகச் செய்தியாளர் ( நான்கு பதவிகள் )

தலைநகர் புதுதில்லியில் பணிபுரிவதற்கு பிராட்காஸ்ட் ஜர்னலிஸ்ட் எனப்படும் மல்டிமீடியா ( பல்லூடக) செய்தியாளர்கள் தேவைப்படுகின்றனர். பணி குறித்த அறிமுகம், பொறுப்பு மற்றும் இதர விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

3. மூத்த ஒலி/ஒளிபரப்புச் செய்தியாளர், மல்டிமீடியா ( மூன்று பதவிகள் )

தலைநகர் புதுதில்லியில் பணிபுரிவதற்கு சீனியர் பிராட்காஸ்ட் ஜர்னலிஸ்ட் எனப்படும் மூத்த மல்டிமீடியா ஒளிபரப்பு செய்தியாளர்கள் தேவைப்படுகின்றனர். பணி குறித்த அறிமுகம், பொறுப்பு மற்றும் இதர விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்