போயஸ் தோட்ட இல்லம் எனக்கும், தீபாவுக்கும் மட்டுமே சொந்தம் : தீபக் கருத்து

அ.தி.மு.கவின் தலைமை பதவியை வகிப்பதற்கு அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு தகுதியில்லை என்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் கருத்து தெரிவித்துள்ளார்.

தினகரன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அ.தி.மு.கவின் தலைமை பதவியை வகிக்க தினகரனுக்கு தகுதியில்லை : தீபக்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். ஜெயலலிதாவின் இறுதி சடங்கில், சசிகலாவுடன் பங்கெடுத்தவரும் இவரே.

அ.தி.மு.கவில் அதிகாரப்போட்டி ஏற்பட்ட நிலையில் சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என கட்சியில் பிளவு ஏற்பட்டது.

அப்போது சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த தீபக் தற்போது கட்சியின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் பொறுப்பேற்றுள்ள நிலையில் தன்னுடைய எதிர்ப்புகளை நேரிடையாக தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கட்சியின் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள டி.டி.வி தினகரன் குறித்த கேள்விக்கு அ.தி.மு.க உடையாமல் இருக்க மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணைய வேண்டும் என்றும், தினகரனின் தலைமையை யாரும் ஏற்க மாட்டார்கள் அவருக்கு அந்த தகுதியில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகையை தானே முழுவதுமாக கட்டத்தயார் என தெரிவித்த தீபக், ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சசிகலா தன் தாய்க்கு இணையானவர் என்று குறிப்பிட்ட தீபக், வாக்காளர்கள் அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எந்த சந்தர்ப்பத்திலும் அவரைவிட்டு செல்லமாட்டேன் என்றும், என்றைக்கு தன்னுடைய ஆதரவு சசிகலாவுக்கு இருக்கும் என்றும் அழுத்தமாக கூறியுள்ளார்.

தனக்கும், தீபாவுக்கும் எவ்விதமான மனக்கசப்புகள் இல்லை என்று கூறிய தீபக், போயஸ் தோட்டம் அவர்கள் இருவருக்குமே சொந்தமானது என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்