எண்ணூர் எண்ணெய் கப்பல் விபத்து: மீனவக் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் நிதியுதவி

எண்ணூரில் காமராஜர் துறைமுக கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாயை இடைக்கால இழப்பீடாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எண்ணூர் எண்ணெய் கப்பல் விபத்து

பட மூலாதாரம், Getty Images

ஜனவரி 28ஆம் தேதியன்று எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி எரிவாயு நிரப்பிய கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

எம்.பி.டபிள்யூ மாப்பிள் என்ற இந்த கப்பலும், மும்பையில் இருந்து துறைமுகம் நோக்கி வந்த எம்.டி. டான் காஞ்சீபுரம் என்ற எண்ணெய்க் கப்பலும் துறைமுகத்தின் நுழைவுக் கால்வாய் அருகில் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் எண்ணெய்க் கப்பல் சேதம் அடைந்தது.

பட மூலாதாரம், Getty Images

இதனால், டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த எண்ணெய் கசிந்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் கடற்பகுகளில் 1 அடி உயரத்திற்கு கடலில் எண்ணெய் மிதக்க ஆரம்பித்தது.

இந்த எண்ணெய்ப் படலத்தை அரசு அமைப்புகளும் பெரும் எண்ணிக்கையிலான தன்னார்வலர்களும் அகற்றினர். இருந்தபோதும் இன்னும் பல இடங்களில் எண்ணெய் படலங்கள் கரை ஒதுங்கிவருகின்றன.

இதையடுத்து இந்தப் பகுதியிலிருந்து மீனவர்களால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடியவில்லை என்பதோடு, பிடித்துவரப்பட்ட மீன்களையும் யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை.

இந்த நிலையில், எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்ட 30,000 மீனவக் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்