கிம் ஜாங்-நம் முகத்தில் விஷம் தடவ 90 டாலர் பெற்ற பெண்

வடகொரிய தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலையில் கைது செய்யப்பட்ட இந்தோனீஷிய பெண், தான் ஒரு குற்றமற்றவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

சிட்டி அய்ஷ்யா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

"குழந்தைகளுக்கு பூசும் எண்ணெயை" பூசச்சொல்லி தனக்கு பணம் கொடுத்தார்கள் : சிட்டி அய்ஷ்யா

சிட்டி அய்ஷ்யா என்ற அந்த பெண்ணை இந்தோனீஷிய தூதரக அதிகாரிகள் மலேஷிய தலைநகரில் சந்தித்தனர்.

நகைச்சுவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கிம் ஜாங்-நம்மின் முகத்தில் "குழந்தைகளுக்கு பூசும் எண்ணெயை" பூசச்சொல்லி தனக்கு 90 டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், தான் அதை விளையாட்டு என நம்பி அதில் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.

பேரழிவு ஆயுதமாக ஐ.நா. மன்றம் வகைப்படுத்தியுள்ள, நரம்புமண்டலத்தை தாக்கும் மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட வி.எக்ஸ் வேதிப்பொருளை பயன்படுத்தி, கிம் ஜாங்-நம் கொல்லப்பட்டதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம், கோலாலம்பூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கான பதிவு மண்டபப் பகுதியில் காத்திருந்த, கிம் ஜாங் நம்-ஐ, இரு பெண்கள் அணுகிய பிறகு அவர் இறந்தார்.  

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்