திருச்செந்தூர் அருகே சுற்றுலா பயணிகளின் படகு கவிழ்ந்து 9 பேர் பலி

தமிழகத்தில் திருச்செந்தூர் அருகே மணப்பாடு பகுதியில் சுற்றுலா பயணிகளின் படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

படக்குறிப்பு,

விபத்துக்குள்ளான படகு

ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

திருச்சி பெல் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களின் குடும்பத்தினர் திருச்செந்தூர் சுற்றுலா சென்றனர். மணப்பாடு பகுதியில், இன்று மாலை வல்லம் என்று அழைக்கப்படும் பெரிய படகில் அவர்கள் கடலுக்குள் சென்றனர்.

அந்த நேரத்தில், கடல் சீற்றம் கடுமையாக இருந்த காரணத்தால் படகு கவிழ்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதில், படகில் இருந்த நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் நான்கு குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 14 பேர் மீட்கப்பட்டு, திசையன்விளை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்