ரூபாய் நோட்டு தடையால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த வருடத்தின் கடைசி காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த வீழ்ச்சி குறைவானதாகவே உள்ளது; உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை தடை செய்தமையால் வளர்ச்சி விகிதம் 6.5 சதத்துக்குக் கீழ் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.

முந்தைய காலாண்டின் 7.3 சதம் என்ற வளர்ச்சியை காட்டிலும் கடைசி காலாண்டின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இந்த அளவு அதிகமாக கூறப்பட்டுள்ளதாகவும், முறைசாரா வகுப்பினரிடம் நோட்டுக்களுக்கு விதிக்கப்பட்ட தடை முழுமையாக பிரதிபலிக்கவில்லை எனவும் பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களுக்கு விதிக்கப்பட்ட தடை பணம் செலவழிப்பது குறித்த மனோபாவத்தை மாற்றியுள்ளதாக சில்லறை விற்பானையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்