தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க கோக், பெப்ஸி நிறுவனங்களுக்கு அனுமதி

  • 2 மார்ச் 2017

தமிழ்நாட்டில் கோகோ கோலா மற்றும் பெப்ஸி குளிர்பானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அந்த நிறுவனங்கள் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Karthikeyan.pandian
Image caption தாமிரபரணி ஆறு

நான்கு மாதங்களுக்குமுன், உள்ளூர் நுகர்வோர் குழு ஒன்று நிறுவனங்களின் தண்ணீர் பயன்பாடு விவசாயிகளுக்கு தீங்கிழைப்பதாக கூறி வாதிட்டதை அடுத்து, தமிழகத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பெப்ஸி மற்றும் கோக் விற்பனையை அறவே நிறுத்துவோம்: தா. வெள்ளையன் பேட்டி

உபரி நீரை மற்றுமே பயன்படுத்துவதாகவும், தாங்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாகவும் அந்த நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

கடந்த புதன்கிழமை முதல், தமிழகத்தில் வணிகர் சங்கங்களின் ஏற்பாட்டின்படி, கடைகளில் கோகோ கோலா மற்றும் பெப்ஸி குளிர்பானங்களின் விற்பனை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெடுவாசலில் தொடரும் போராட்டம்: குறையாத கூட்டம் (புகைப்படத் தொகுப்பு)

தமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனை நிறுத்தம் அமல்

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்குழுவுக்கு முதல்வர் உறுதி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தமிழகத்தில் பெப்ஸி கோக்கிற்கு தடை: மக்கள் கருத்து(காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்குத் தடை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்