ஆண்களின் உதவியின்றி பெண் பணியாளர்களை வைத்து சாதித்து காட்டிய ஏர் இந்தியா

முதன்முறையாக உலகைச்சுற்றி பயணிகள் விமானம் முழுவதும் பெண் குழுவினரால் இயக்கப்பட்டதாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER - SAN FRANCISCO AIRPORT
Image caption ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் பூமியை சுற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்துள்ளது

கடந்த திங்கட்கிழமையன்று, புதுதில்லியிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானமானது வெள்ளிக்கிழமையன்று இந்திய தலைநகருக்கு திரும்பியுள்ளது.

ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம் அமெரிக்கா செல்லும் பயணத்தில் பசிஃபிக் பெருங்கடல் மீது பயணப்பட்டதாகவும், மீண்டும் திரும்பும் போது அட்லான்டிக் மீது பறந்து பூமியை சுற்றி வந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER - SAN FRANCISCO AIRPORT
Image caption சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்பாகவே இந்த பயணம் நிறைவடைந்துள்ளது

இந்த சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக பதிவு செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது, பயணச்சீட்டை சரிபார்க்கும் பணியாளார்கள், விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு பணியாளார்கள், விமானம் புறப்படுவதற்குமுன் அதற்கு சான்றிதழ் அளிக்கும் பொறியாளர்கள் மற்றும் விமானம் கிளம்பவும் தரையிறங்கவும் அனுமதியளிக்கும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆகிய அனைவரும் பெண்கள் என்று பெருமையுடன் கூறுகிறது ஏர் இந்தியா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்